×

கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பல்லடம்,மார்ச்4: பல்லடம் அருகே பருவாய் ஊராட்சியில் உள்ள கடைவீதி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், 75 சதவீதம் மட்டுமே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது. மீதம் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருவோரங்களில் தேங்கி நின்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Palladam ,Kadayaveethi Road ,Paruvai Panchayat ,
× RELATED டைமிங் பிரச்னையால் மினி பஸ் கண்ணாடி உடைப்பு