×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 8ம் தேதி கடைசி நாள்

திருப்பூர், மார்ச் 3: எம்பிபிஎஸ். பிடிஎஸ். உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ), 2026 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே, 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடக்கவுள்ளது.

htttps://nta.ac.in என்ற இணையதளத்தில் தகவல்களை கூடுதல் விபரங்களை அறியலாம்.தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம், 7ம் தேதி வெளியாகியது. அன்று முதலே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர், 1,700 ரூபாயும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாயும், பிற வகுப்பினர், 1,600 ரூபாயும் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாக மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 8ம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது.

Tags : Tiruppur ,National Testing Agency ,NTA ,
× RELATED ரூ.5.06 கோடியில் முடிவுற்ற, புதிய திட்ட பணிகள் துவக்கம்