×

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்? இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ சந்திப்பால் பரபரப்பு

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள இபிஎஸ் அறையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவான அருள், இபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிக்காமல் உள்ள நிலையில் பாமக எம்எல்ஏ அருளின் திடீர் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ் கூறி இருந்தார். ஆனால் இதுவரை அதிமுக அணியில் இணைவதாக எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் இதில் மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்பட்டது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்ட மேடையில் அய்யா டாக்டர் ராமதாஸ் இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

Tags : RAMADAS ,EPS ,MLA ,Chennai ,Arul ,Secretary General ,Edapadi Palanisami ,Tamil Nadu Assembly elections ,
× RELATED தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான...