×

எஸ்ஐஆரில் பெரிய அளவில் முறைகேடுகள் சமாஜ்வாடி ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: உபி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று அளித்த பேட்டி: உத்தரபிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்களின் பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டுள்ளன. அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு எஸ்ஐஆர் பற்றி மிகக்குறைவான தகவல்களையே தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாபகஞ்ச் பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 365ல் போலி கையெழுத்துகள் மூலம் கிட்டத்தட்ட 100 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுவான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்கள் என்றார்.

Tags : SIR ,Samajwadi ,Akhilesh Yadav ,Lucknow ,Former ,UP ,Chief Minister ,Samajwadi Party ,Uttar Pradesh ,SIR… ,
× RELATED மலைகள் பாதுகாப்புக்கு ரூ.1950 கோடியில் 2...