×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு எண் வெளியீடு

சென்னை: தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள பள்ளி மாணவர்களின் விவரம் மாவட்ட வாரியாக கேட்டுப்பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேர்வெண்ணுடன் கூடிய மாணவர்களின் பெயர்ப் பட்டியல் dgeapp.tnschools.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Director of Examinations ,Sasikala ,Tamil Nadu ,
× RELATED இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்