சென்னை : கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். கீழடியில் ரூ.24.30 கோடி செலவில் நான்கரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
