சென்னை: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 3வது பகுதிக்கு ஒப்புதல், நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகள் வழங்கி தமிழ்நாடு சாதித்துள்ளது.

