×

10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு

 

சென்னை: 10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. 2023ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் எழுதிய விடைத்தாள்களை கேட்டு மாணவி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு முடிந்த 5 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது எனக் கூறி நிராகரித்தது. விடைத்தாள் வழங்கப்படாத நிலையில் மாநில தகவல் ஆணையரிடம் மாணவி மேல்முறையீடு செய்தார். மாணவி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தகவல் ஆணையர், கட்டணம் செலுத்தி விடைத்தாளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தி நகல்களைப் பெற முடியும்.

Tags : State Information Commission ,RTI ,Chennai ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு