×

வருகிற செப்.26 வரை கால அவகாசம் நீட்டிப்பு பிறப்புசான்றில் குழந்தையின் பெயர் பதிவு

நெல்லை, பிப். 13: பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் 1969-ன் படியும், பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2000-த்தின்படியும், 2009ம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் 30.12.2024 என முடிவடைந்த நிலையில் இது தொடர்பான பரிந்துரைகளை முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதை அரசு பரிசீலித்து மீண்டும் 26.09.2026 முடிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் பிறப்பு நிகழ்ந்துள்ள பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தை அணுகி குழந்தையின் பெயரை பதிவு செய்து குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி தொடர்பான ஏதேனும் ஒரு ஆவண நகலுடன் (School Mark Sheet, TC or School Bonofide Letter or Etc) விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, குழந்தையின் பிறப்புப் பதிவேட்டில் குழந்தையின் பெயர் பதிவு செய்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்புச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai ,Collector ,Sukumar ,
× RELATED அதிமுக கூட்டணி சார்பில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம்