×

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி பிப்.14: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் 10 வது நாளான நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Anganwadi ,Theni District Collector's Office ,Theni ,Nutrition and Anganwadi Workers' Association ,Tamil Nadu Nutrition and Anganwadi Workers' Association ,
× RELATED ஓமலூர் வட்டாரத்தில் பூத்து குலுங்கும் மாமரங்கள்