×

விஏஓக்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு

திருப்பூர், பிப்.14: திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான வருடாந்திர பொது இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருப்பூர் வடக்கு,தெற்கு,பல்லடம்,அவிநாசி,ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவும் பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கவும் இந்த கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 122 விஏஓக்கள் கலந்து கொண்டனர். ஏ பிரிவு கிராமங்களில் பணிபுரிய 25 அலுவலர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும்,பணிமூப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் நீண்ட மாதங்களாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

Tags : Tiruppur ,Tiruppur Revenue Divisional Office ,Tiruppur North ,South ,Palladam ,Avinashi ,Uthukuli ,Tiruppur Revenue Division ,
× RELATED வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்