×

பிட்ஸ்

* துப்பாக்கி சுடுதலில் அனிஸுக்கு வெண்கலம்
புதுடெல்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா சிறப்பாக செயல்பட்டு 23 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் ஜப்பானின் யோஷிகா டாய் 31 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கஜகஸ்தான் வீரர் நிகிடா சிர்யுகின், 28 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

* டென்னிசில் 600 வெற்றி மரின் சிலிக் சாதனை
டெக்சாஸ்: அமெரிக்காவில் நடந்து வரும் டல்லாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், யுஎஸ் ஓபன் டென்னிஸ் முன்னாள் சாம்பியனான, குரோஷியா வீரர் மரின் சிலிக் (37), அமெரிக்காவின் லேர்னர் டியனை 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இது, ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் மரின் சிலிக் பெற்றுள்ள 600வது வெற்றியாகும். இதன் மூலம், தற்போது டென்னிஸ் ஆடி வரும் வீரர்களில் செர்பியாவை சேர்ந்த ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சிற்கு பின், 600 வெற்றிகள் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

* ஸ்டோக்ஸ் முகத்தில் அறுவை சிகிச்சை
லண்டன்: கிரிக்கெட் பயிற்சியின்போது பந்து தாக்கி முகத்தில் பலத்த காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு (34), முகத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்சின் கண், மூக்கு, கன்ன எலும்பு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்த புகைப்படத்ததை சமூக வலைதளத்தில் பென் ஸ்டோக்ஸ் பகிர்ந்துள்ளார்.

Tags : Anis ,New Delhi ,Anish Bhanwala ,Asian Shooting Championship ,Japan's… ,
× RELATED பிரீமியர் லீக் கால்பந்து: மேன் சிட்டி கோல் வேட்டை