×

உலகக் கோப்பை டி20யில் இன்று புலிப்பாய்ச்சலுடன் இந்தியா புரியாமல் தவிக்கும் நமீபியா

புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 குரூப் ஏ பிரிவில், 18வது போட்டி புதுடெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பலம் வாய்ந்த, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியுடன் கெரார்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா மோதவுள்ளது. மும்பையில் அமெரிக்காவுடன் நடந்த முதல் போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடியபோதும் பின்னர் அட்டகாசமாக ஆடி வெற்றிக்கனியை பறித்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அபிஷேக் சர்மா, வயிற்று வலி காரணமாக இன்றைய போட்டியில் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. இருப்பினும், வலிமை குறைந்த கத்துக்குட்டி அணியான நமீபியாவுடன் நடக்கும் போட்டி என்பதால், அபிஷேக் ஆடாதது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

டெல்லியில் போட்டி நடக்கும் பெரோஷ் கான் கோட்லா மைதானம், திறமையான போட்டியாளர்களுக்கு உகந்தது. எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் பட்டையை கிளப்பி ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கலாம். நமீபியாவுடனான போட்டி, இந்தியாவுக்கு மற்றுமொரு பயிற்சி போட்டியாகவே இருக்கும். அவுட் ஆப் பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் மீண்டெழுவதற்கு இப்போட்டியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா, நமீபியாவை எளிதில் சரணடையச் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் நமீபியாவை இந்தியா ஏ அணி 100 ரன்னுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு ஓரளவாவது போட்டியை நமீபியா கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி துவங்கும் நேரம்: இரவு 7 மணி

Tags : Namibia ,India ,T20 World Cup ,New Delhi ,T20 World Cup Group A ,Suryakumar Yadav ,Gerard Erasmus ,USA ,Mumbai… ,
× RELATED பிரீமியர் லீக் கால்பந்து: மேன் சிட்டி கோல் வேட்டை