×

பிரீமியர் லீக் கால்பந்து: மேன் சிட்டி கோல் வேட்டை

லண்டன்: பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, மேன் சிட்டி அணி, 3 கோல் போட்டு ஃபுல்ஹாம் அணியை அபாரமாக வென்றது. இங்கிலாந்தில் உள்ள 20 புகழ்பெற்ற கால்பந்து அணிகள், பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் ஆடி வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் பலம் வாய்ந்த மேன் சிட்டி-ஃபுல்ஹாம் அணிகள் மோதின. துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய மேன் சிட்டி வீரர்கள் பம்பரமாய் சுழன்றாடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அதன் பயனாக, போட்டியின் 24வது நிமிடத்தில் மேன் சிட்டி அணியின் ஆன்டோய்னி செமன்யோ முதல் கோல் போட்டு அசத்தினார்.

அவரைத் தொடர்ந்து, அதே அணியின் நிகோ ஓரெய்லி 30வது நிமிடத்திலும், எர்லிங் ஹாலண்ட் 39வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் போட்டு திணறடித்தனர். அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் மேன் சிட்டி அமர்க்கள வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்டன் வில்லா அணி , 1-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியை வீழ்த்தியது. இன்னொரு போட்டியில், லிவர்பூல் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்டை வெற்றி வாகை சூடியது.

Tags : Premier League Football ,Man City ,London ,Fulham ,Premier League ,England ,
× RELATED டி20 உலகக் கோப்பை: நமீபியா அணிக்கு...