தேவதானப்பட்டி, பிப். 11: தேவதானப்பட்டி காளியம்மன்கோவில்தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்(59). இவர் வைகை அணை அருகே தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து டூவீலரில் தேவதானப்பட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயமங்கலம் வராகநதி ஆற்றுப்பாலம் அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
