×

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

 

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.11: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவரிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ரத்தினம்(60). இவர், அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், கோமாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(35) மற்றும் திருவாடானை சின்ன கீரமங்கலம் பகுதியை சேர்ந்த ஐயப்பன்(56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பல்வேறு இடங்களிலும் வழிப்பறியில் ஈடுபட்டதால், எஸ்.பி உத்தரவுபடி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து வெள்ளைச்சாமி, ஐயப்பன் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

Tags : R.S. Mangalam ,Sachithanandam ,Settiyakottai ,Rattinam ,Mangalam ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்