×

100 சதவீதம் வாக்களிக்க கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி

 

கமுதி, மார்ச் 21: கமுதி அருகே நத்தம் கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதியும், கோஷமிட்டும் சென்றனர். முன்னதாக வாக்காளரின் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : Kamudi ,Natham village ,Tamil Nadu State Rural Livelihood Movement Project ,Women's Self-Help Group ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...