×

காங்கயத்துக்கு தமாகா குறி

 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விடியல் சேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். பின்னர், காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்று கட்சியை தொடங்கினார். இதில் இணைந்த விடியல்சேகர் துணை தலைவராகி அக்கட்சியின் முக்கிய நபராக இருந்து வருகிறார்.

மேலும், சில முடிவுகள் எடுப்பதில் ஜி.கே.வாசனுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக மேலிட தலைவருடன் நெருக்கம் காட்டி வருவதால் தனது நிர்வாகிகளுக்கு சீட் பெற்றுதர முனைப்போடு ஜி.கே.வாசன் செயல்பட்டு வருகிறார்.

இதனால், எப்படியாவது பாஜ சீட் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் ஏற்கனவே வெற்றி பெற்ற காங்கயம் தொகுதியை ஜி.கே.வாசனிடம் விடியல் சேகருக்கு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கயத்தை அதிமுக அதிமுக தான் போட்டியிடும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பரிசு பொருட்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kangayam ,Vidyal Shekhar ,Congress party ,DMK ,Tiruppur district ,Congress… ,
× RELATED சொல்லிட்டாங்க…