×

வயிற்றில் தங்கி வெளியே வராத பாம்பு எடப்பாடி! நாஞ்சில் சம்பத்து ஒரே கொத்து…

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கு முன்வந்தவர் சசிகலா. சிறைக்குப் போகும்போதே அவரை முதலமைச்சராக முடிசூட்டி பார்த்தவர் சசிகலா. அவர், சிறைக்கு சென்ற பிறகு, தன்னை முதலமைச்சராக்கிய அவரையே கட்சியை விட்டு நீக்கினார். தற்போது, சசிகலா கதறி அழுகிறார். முதலமைச்சராக முடிசூடி பார்த்த அவன், என் தலை மேலேயே கை வைக்கிறான் என்று கதறும் கதறல் என் காதுக்கு கேட்கிறது. இதைப்பற்றி ஒரு குட்டி கதை சொல்கிறேன். ‘‘ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு வேட்டை நாய். ஊர்ந்து கொண்டிருக்கிறது ஒரு பாம்பு. அதை எப்படியாவது கடித்து குதறி விடலாம் என்று நினைத்து வேட்டை நாய் துரத்துகிறது. பாம்பு பயந்து ஓடுகிறது. அப்போது ஒரு வழிப்போக்கனை பார்த்து, ‘வேட்டை நாய் என்னை கடித்து குதற துரத்துகிறது. எப்படியாவது காப்பாற்றுங்கள். எனது உயிருக்கு உத்தரவாதம் தாருங்கள்’ என்று பாம்பு கேட்டபோது, ‘நான் மனிதன். நீ பாம்பு. நான் எப்படி உனக்கு பாதுகாப்பு தருவது? உன்னை நான் எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவா முடியும்’ என்று கேட்டான்.

அதற்கு பாம்பு சொன்னது, ‘இல்லை இல்லை… நீ குந்தி உட்கார்ந்து கொள். நான் உன் பின்புற வழியாக உடலுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறேன் என்றது. அந்தப் பாம்பை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிய வழிப்போக்கனும், உயிர் பிச்சை கொடுப்போம் என்று குந்தி உட்கார்ந்தான். பாம்பு, வழிப்போக்கனின் பின்புறமாக நுழைந்து வயிற்றில் ஒளிந்து உட்கார்ந்து கொண்டது. அந்த வேட்டை நாய் திரும்பி போய்விட்டது. பாம்பிற்கு உயிர் பயம் இல்லை, ஆனால் வழிப்போக்கனுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது. பாம்பிடம் சொன்னான். எனக்கு வயிறு வலிக்கிறது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வலி. தயவு செய்து வெளியேறு என்று! அதற்கு பாம்பு, ‘இந்த இடம் ரொம்ப பாதுகாப்பாக உள்ளது. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்’ என்று சொன்னதாம். அந்த பாம்பிற்கும், இந்த எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது கூறுங்கள். இவ்வாறு பேசினார்.

 

Tags : Edappadi ,Nanjil Sampath ,Thaveka ,Vedasandur, Dindigul district ,Palaniswami ,Minister ,Sasikala ,
× RELATED புதுச்சேரி தொகுதி பங்கீடு கையெழுத்து காங்கிரஸ்-16, திமுக -14