×

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

 

தேவதானப்பட்டி, பிப்.10: வைகை அணை அருகே முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வைகை அணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்சரவணகுமார் வழங்கினார்.
உடன் திமுக நிர்வாகிகள் பெரியகுளம் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் பாஸ்கர அய்யன் முதலக்கம்பட்டி, முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட மீனவர் அணி துணைத்தலைவர் வேல்முருகன், வைகை புதூர் கிளைச் செயலாளர் சந்தானம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாண்டி கணேஷ், வைகை அணை கிளை இளைஞர் அணி அமைப்பாளர் சிவா உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Devadhanapatti ,Periyakulam ,MLA ,Saravanakumar ,Government Higher Secondary School ,Vaigai Dam ,Mudalakampatti Panchayat ,DMK ,Periyakulam… ,
× RELATED அதிமுக கூட்டணி சார்பில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம்