- தென் பாலயம் சந்தை
- திருப்பூர்
- திருப்பூர் தெற்கு பாம் மார்கெட்
- திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்து 6 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். தற்போது மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக தினந்தோறும் லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு அதிக அளவு கொண்டு வரப்படுகிறது.
நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 டன் வரையிலான வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால், இறக்கி வைப்பதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால், வெங்காய மண்டிகளில் இடவசதி ஏற்படும் வரை தென்னம்பாளையம் ஏபிடி சாலையில் வெங்காய மூட்டையுடன் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக வெயில் அதிகளவு இருப்பதன் காரணமாக வெங்காயம் காய்வதற்காக லாரிகளில் மூடப்பட்டிருந்த வெங்காயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெங்காய வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே பெரிய வெங்காயம் விலை குறைந்து வருகிறது. தற்போது சில்லரை விற்பனையில், 4 கிலோ முதல் 6 கிலோ வரையிலான வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
