×

12ம் தேதி ஸ்டிரைக் மக்கள் ஆதரவு தர வைகோ வேண்டுகோள்

 

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு, கடந்த நவம்பர் 21ம்தேதி அறிவித்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பங்கேற்பது, ஒன்றிய அரசை எதிர்க்கக்கூடிய கட்சிகள் அனைத்திற்கும் கடமையாக இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு வழங்குவதுடன், நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக மக்களும் ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Union BJP government ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்