×

இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளது அதிமுகவிடம் 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: சென்னை பாஜ ஆலோசனை கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேச்சு

 

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள் தான் உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவிடம் 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்று பாஜ தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி விவகாரத்தை எல்லாம் பாஜ தான் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் தான் ெதாகுதியை ஒதுக்கீடு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க என்டிஏவில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டியை அமைக்க பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பாஜவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று சென்னை வந்தார். தொடர்ந்து அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ெதாகுதிகளுக்கான சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த முன்னாள் தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் வியூகங்கள் குறித்தும் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் விளக்கினார்.

அப்போது, தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியது தொடர்பாக தன் கருத்துகளை பி.எல்.சந்தோஷ் முன் வைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பொறுப்பில் இருந்து விலகியதை பற்றி விவாதிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பிற்பகலில் நடந்த கூட்டத்தில் அவசரம் அவசரமாக அண்ணாமலை கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள் தான் இருக்கிறது. முதல் கட்டமாகவே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த முறை தேர்தலில் பாஜ அதிக தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.

தேர்தலில் 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். சொல்ல போனால் கூட்டணியில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும். எனவே நிர்வாகிகள் அனைவரும் தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக மூத்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாஜவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags : AIADMK ,B.L. Santosh ,Chennai ,BJP ,Tamil Nadu Assembly elections ,BJP National Organization ,General Secretary ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்