×

மாம்பழம் சின்னத்தை முடக்கி அன்புமணியை தாமரையில் நிற்க வைக்க பாஜ முயற்சி?

 

திண்டிவனம்: மாம்பழம் சின்னத்தை முடக்கி அன்புமணியை தாமரையில் நிற்க வைக்க பாஜ முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் வட்டாரத்தில், ராமதாசின் தனி செயலாளர் சுவாமிநாதன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராமதாசுக்கு சாதகமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாமக ராமதாஸ் வசம் தான் உள்ளது என்பது முடிவாகிவிட்டது.

இதனால் அன்புமணி, பாமகவின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையமே மறு ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த மனுவின் விசாரணை நாளை (இன்று) காலை நீதிபதி மினி புஷ்கர்ணா முன்னிலையில் 2வது வழக்காக வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மாம்பழ சின்னத்தை முடக்கி அன்புமணியை தாமரை சின்னத்தில் நிற்க வைக்க பாஜ மறைமுகமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பாஜ, அன்புமணியை உறவாடி கெடுக்கும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. உங்களுடையது தான் கட்சி, உங்களுக்கு தான் சின்னம் என்று கூறி அதிகாரத்தை வழங்கி ராமதாஸை கூட்டணியில் சேர்க்க பாஜ முடிவு செய்து உள்ளது. இதனால் கட்சிக்கு உரிமை கொண்டாடி வரும் அன்புமணி முழுமையாக பாஜவிடம் சரணடையும் நிலை ஏற்படும்’ என்றனர்.

Tags : BJP ,Anbumani ,Tindivanam ,Tailapuram ,Tindivanam, Villupuram district ,Ramadoss ,Swaminathan ,
× RELATED தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான...