×

ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வருக்கு இன்று நன்றி அறிவிப்பு மாநாடு: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை: ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags : JACTO Geo ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...