×

காவலர் தேர்வில் அண்ணன் தேர்ச்சி தோல்வியால் விரக்தி தம்பி தற்கொலை

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் கேசவன் (24). இவர் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்துவிட்டு, தனியார் பால் நிறுவனத்தில் கலெக்சன் பணியில் இருந்தார். இவரும், இவரது அண்ணன் எழிலரசனும் காவலர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதில் எழிலரசன் தேர்ச்சி பெற்றார். கேசவன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் கேசவன் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், பாட்டி வீட்டிற்குச் சென்றார். அங்கு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Anthiyur ,Murugan ,Kesavan ,Alampalayam ,Erode district ,Ezhilarasan ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...