×

துரோகத்துக்கு பெயர்போன அதிமுக அப்பாவுக்கு துரோகம் செய்த பாமக: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கு

வடலூர்: கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் சிறப்பாக அழைப்பாளராக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்.

இப்போது புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் கலாசார சீர்கேடு, ஊழல் என்று கூறி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு நடிகன் ஊழலைப் பற்றி பேசி வருகிறான். விஜய்யிடம் ஊழல் இல்லையா?. நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இன்று விஜய்க்கு நேரடியாக ஒரு சவால் விடுகிறேன். ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய் என்று கூறு பார்ப்போம்.

ஆரம்பத்திலேயே ஊழல் செய்துவிட்டு பிளாக்கில் 100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்று ஊழல் செய்கிறார்கள். இப்படி எல்லாம் ஊழல் செய்கிறவர்கள் நாளை ஆட்சியைப் பிடித்தால் நாட்டில் கலாசார சீரழிவுகள் ஏற்படும். துரோகத்திற்கு அடையாளமான கூட்டணி அதிமுக தான். நன்றிக்கு விசுவாசமாக இருப்பவர் தான் நம்முடைய முதலமைச்சர் முக ஸ்டாலின்.

ஆனால் கல்லாப்பொட்டி சிங்காரமாக இருந்த எடப்பாடி தற்போது பேசி வருகின்ற ஸ்டைலே பார்த்தாலே சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அடிமையாக இருந்தவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். இப்போது பெற்ற தந்தைக்கு துரோகம் செய்தவர்கள், . இதுபோன்று துரோகத்துக்கு பெயர்போன அதிமுக, அப்பாவுக்கு துரோகம் செய்த பாமக கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என மக்களாகிய நீங்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Bhamaka ,Minister ,MRK ,Paneerselvam ,Tamil Nadu Thalakuniya General Meeting ,Kartanjipadi, Cuddalore East District ,MRK Paneerselvam ,Edappadi Palanisami ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...