×

மாம்பழம் எங்களுக்கே சொந்தம்: ராமதாஸ் பேட்டி

சென்னை: செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா நடந்தது. விழாவில், ராமதாஸ் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி வந்து மணமக்களை வாழ்த்திய நிலையில், நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி, மகள் காந்திமதி மற்றும் முகுந்தன் ஆகியோர் குடும்பத்துடன் வருகை தந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மாம்பழம் சின்னம் எங்களுடையதுதான், எங்களுக்கு சொந்தமானது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும். மாம்பழ சின்னம் எங்களுக்கு சொந்தமாகும். கூட்டணி தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.

Tags : Mangoes ,Ramadoss ,Chennai ,PMK ,Pazhalveli ,Chengalpattu ,Anbumani… ,
× RELATED தஞ்சை தவெக கூட்டத்தில் தடுப்புகளை...