×

சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

வருகிற 17ம் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வருகிற 11ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழ்நாடு வர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Assembly ,Election Commission of India ,Chief Election Commissioner ,
× RELATED உயர்கல்வியின் கிரீடமாக அண்ணா...