×

குடிபோதையில் ரகளை; வாலிபர் கைது

ஈரோடு,பிப்.4: அந்தியூர் அடுத்த கிட்டம்பட்டி பகுதியில்,வெள்ளித்திருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய ஒருவர், சாலையில் செல்வோரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனை பார்த்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் ஆலம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Erode ,Vellithiruppur ,Kitampatti ,Anthiyur ,
× RELATED பெருந்துறையில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்