×

அந்தியூர் அருகே பைக்- வேன் மோதி தொழிலாளி பலி

அந்தியூர்,பிப்.4: அந்தியூர் அடுத்த பட்லூர் கெம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன்(36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இதே பகுதியை சேர்ந்த சண்முகம் (31) என்பவருடன் பைக்கில் சென்றார்.  சமயதாரனூர் அருகே வந்தபோது பைக் நிலைதடுமாறி எதிரே வந்த பிக் அப் வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக் ஓட்டிய சரவணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Anthiyur ,Saravanan ,Kemmiyampatti Mariamman Kovil Road, Patlur ,Shanmugam ,Samayataranur ,
× RELATED ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடியவர் கைது