×

கர்நாடக மது கடத்தியவர் கைது

ஈரோடு, ஜன.30: கர்நாடக மாநில மது கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஆசனூர் சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டதில் அவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரை சேர்ந்த முகமது ஹக்கீல் தாரிக் (25) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த கர்நாடக மாநில மது பாட்டில்கள் 3 மற்றும் மது பாக்கெட் 1 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags : Karnataka ,Erode ,Gopi Prohibition Enforcement Division ,Asanur ,
× RELATED பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்