×

குட்கா விற்பனை செய்த இரு கடைகளுக்கு சீல்

சத்தியமங்கலம், ஜன. 29: பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் நந்தகுமார் (31) என்பவர் நடத்தி வந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்த பவானிசாகர் போலீசார் வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்தனர். இதேபோல் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் சாஸ்திரி நகர் பகுதியில் தாஹிரா பானு (36) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தாகிராபானு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மேற்கண்ட இருகடைகளுக்கும் சென்று சீல் வைத்து 14 நாட்கள் கடை திறந்து வியாபாரம் செய்யக் கூடாது என எச்சரித்தார். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக நந்தகுமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், தாஹிரா பானுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.

 

Tags : Sathyamangalam ,Bhavanisagar police ,Nandakumar ,Puduppirkadavu ,Bhavanisagar ,
× RELATED பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்