×

ரயில் மோதி முதியவர் பலி

ஈரோடு, ஜன. 30: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட காவிரி ரயில்வே ஸ்டேஷன் தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்பதும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

ஆனால், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் காக்கி கலர் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருந்தார். இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags : Erode ,Cauvery Railway Station ,Erode Railway Police ,
× RELATED பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்