திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு வந்த எஸ்ஐடி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்று பூஜை செய்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராம் ஒரு சாட்சியாக சேர்க்கப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
