×

திருப்பதி லட்டு முறைகேடு: கிலோவுக்கு ரூ.25 லஞ்சம் கேட்டதாக குற்றப்பத்திரிகையில் தகவல்

திருப்பதி: தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி உதவியாளர் உ.பி. நிறுவனத்திடம் கிலோவுக்கு ரூ.25 லஞ்சம் கேட்டதாக குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உ.பி. நிறுவனத்திடம் இருந்து உதவியாளர் சின்னப்பனா ரூ.50 லட்சம் பெற்றதாகவும் குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பதியில் லட்டு தயாரிக்க 2019 முதல் 6 ஆண்டுகள் கலப்பட நெய் விற்றதன் மூலம் ரூ.235 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் வழங்கி இருப்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் நெய் தயாரிப்பை ஆய்வு செய்யும் நிபுணர்களும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Tags : Tirupati ,Devasthanam ,Subba Reddy ,U.P. ,Chinnapana ,
× RELATED சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி...