×

திருப்பதியில் பதிவு அலுவலக உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு

*ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

திருமலை : திருப்பதியில் பதிவு அலுவலக உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.திருப்பதி ராமச்சந்திரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திருமலேஷ். இவர் ரேணிகுண்டா பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

திருமலேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tirumalai ,Tirupati ,Thirumalesh ,Tirupathi Ramachandra ,Renigunda ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அவகாசம் நீடிப்பு!!