×

அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 

தேனி: தனிக்கட்சி ஒன்றை தொடங்கும் எண்ணம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கோரிக்கை; அதிமுக பிரிந்திருக்கிறதா? ஒன்றாக இருக்கிறதா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்க வேண்டும். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியும் டிடிவியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். தனி அமைப்பு தொடங்க வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும்தான் காரணம்; தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கவில்லை. கூட்டணி குறித்து வதந்திகள் பரப்பப்படுகிறது என்று கூறினார்.

Tags : DTV ,Dinakaran Edappadi Palanisami ,Atamugwal ,Paneer Selvam ,Teni ,
× RELATED சொல்லிட்டாங்க…