- பாஜக
- இந்தியா
- திமுக மாணவர் ஒன்றியம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- குடியரசு தினம்
- அகில பாரத வித்யார்த்தி…
சென்னை: கலவரக்கார புத்திகொண்ட பாசிச பாஜவுக்கு தெரியாது வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது என்று திமுக மாணவர் அணி செயலாளர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தி தொடர்பாக, அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தது. இதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் ராஜிவ்காந்தி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றொரு பழமொழி இருக்கிறது. அதுபோலத்தான் கலவரக்கார புத்திகொண்ட பாசிச பாஜவுக்கு தெரியாது வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது என்று.மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் மொழியால், கலாசாரத்தால், மதத்தால் வேறுபட்ட இந்தியர்களை “Unity” என்ற உணர்வில் ஒன்று சேர்த்தார்கள். Uniformity என்ற பெயரில் ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழி, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத்தன்மையில் கல்லெறிந்து இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கப்பார்க்கும் கலவரபுத்திகொண்ட பாஜவுக்குத் தெரியாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் “Unity” தான் இந்தியாவின் பலம் என்று. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
