×

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் முனைவர் பட்ட ஆய்வாளர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு 3000 பேர் முனைவர் பட்டம் பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. விலையில்லா மடிக்கணினி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உண்மையில் ஆய்வு மாணவர்கள் தரவு சேகரிப்பு பகுப்பாய்வு இலக்கிய தேடல் ஆய்வு கட்டுரைகள் எழுதுதல் புள்ளியியல் மற்றும் மென்பொருள் இயக்குதல் உள்ளிட்ட தேவைகளுக்கு மடிக்கணினி இன்றியமையாததாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jawahirulla ,Chennai ,Humanist People's Party ,M. H. ,MLA ,Tamil Nadu ,India ,
× RELATED கலவரக்கார புத்திகொண்ட பாசிச...