×

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரூர், ஜன.28: அரூர் வட்டம், நரிப்பள்ளி கிராமம் கல்லாற்றங்கரையில் புதிதாக வெள்ளிமலர் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, வரும் (30ம்தேதி) நடக்கிறது. இந்நிலையில் நேற்று கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைபாலிகை போடுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 29ம்தேதி சக்தி அழைத்தல், தீர்த்தக்குடம், முளைப்பாலிகை அழைத்து வருதல் மற்றும் சாமி ஊர்வலம் நடக்கிறது. 30ம்தேதி காலை 2ம் கால யாக பூஜை துவங்கி வேதபாராயணம், கோபூஜை, நாடிசந்தனம் மற்றும் தீபாராதனையும், தொடர்ந்து விநாயகர், பால முருகர், வெள்ளி மலர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா முன்னேற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Mariamman ,Temple ,Kumbabhishekam ,Arur ,Vellimalar Mariamman Temple ,Naripalli village ,Arur taluk ,Ashtabandhana Kumbabhishekam festival ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்