×

விளாத்திகுளத்தில் இன்று அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம்

விளாத்திகுளம், மார்ச் 21: விளாத்திகுளத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான (213) தேர்தல் செலவின பார்வையாளர் ஷிவ்பிரசாத்பால் இன்று (21ம் தேதி) விளாத்திகுளம் தொகுதியில் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் அவரது தலைமையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vilathikulam ,Tahsildar Kannan ,Vilathikulam Assembly Constituency ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்