- சிவகிரி
- பாலுசாமி
- இசக்கிமுத்து
- செந்தில்குமார்
- தங்கமலை
- பொய்கைமேடு
- சங்கரன்கோவில்-நடவக்குறிச்சி சாலை
- வாசுதேவநல்லூர்
- தென்காசி மாவட்டம்
சிவகிரி, மார்ச் 21:தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட பொய்கைமேடு விலக்கு சங்கரன்கோவில் – நடுவக்குறிச்சி சாலையில் பணி மேற்பார்வையாளர் பாலுசாமி, போலீசார் இசக்கிமுத்து, செந்தில் குமார், தங்கமலை ஆகியோர் அடங்கிய பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் ராஜபாளையம், பெரியகடை பஜாரில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (30) என்பவர் ரூ.1,83,120 ரொக்கப்பணம் வைத்திருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிகணேஷிடம் ஒப்படைத்தனர்.
