- திருவேங்கடம்
- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து
- திருவெங்கடம் தாலுகா
- கிராம நிர்வாகம்
- மணிமொழி சந்துரு
- பஞ்சாயத்து அலுவலகம்
- பிரதான பஜார்
திருவேங்கடம், மார்ச் 21:திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி ஊராட்சியில் வாக்காளர்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணிஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு தலைமையில் நடந்தது.பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் தொடங்கி மெயின் பஜார் மற்றும் பல்வேறு தெருக்களின் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்றம் வந்தடைந்தது. இதில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் கட்டாயம் வாக்களிக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், கோஷங்களும் எழுப்பப்பட்டது. பேரணியில் மகளிர் திட்ட அலுவலர் ராமச்சந்திரன், ஊராட்சி எழுத்தர், மகளிர் குழுக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
