மதுரை: பிறந்தநாள் விழாவில் பெண்ணுடன் ரவுடி வரிச்சியூர் செல்வம் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் மீது பல்வேறு , கொலை, மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கழுத்து முதல் கால் விரல் வரை உடலெங்கும் நகைகள் அணிந்து நகைக்கடை போல நடமாடி வருவார். இவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சினிமாவில் வரும் ரவுடி போல 10க்கும் மேற்பட்ட கார்களில் வந்து, ‘பட்டுக்கோட்டை நம்மாளு..’ என்ற பாடலை ஒலிக்க விட்டு பெண்களுடன் உற்சாகமாக நடனமாடுகிறார்.
அப்போது வரிச்சியூர் செல்வம் திடீரென அருகில் இருந்த பெண்ணை தனது தோளில் மூட்டை போல தூக்கிக்கொண்டு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தன்னை ‘நான் ரவுடி இல்லை… காமெடியான ஆள்’ என சொல்லிக் கொள்ளும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், போலீசாரை பார்க்கும்போது மட்டும் பம்முபவர், சமூக வலைதளங்களில் இது போன்ற வீடியோக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
