- நடராஜர் கோயில் கோபுரம்
- சிதம்பரம்
- 77வது குடியரசு தினம்
- நடராஜர் கோயில்
- சிதம்பரம், கடலூர் மாவட்டம்
- கிழக்கு கோபுரம்
- சிவகாமசுந்தரி சமேதா
- சித்சபா
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் ேகாயிலில் 77 வது குடியரசு தினத்தையொட்டி, கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.முன்னதாக வெள்ளி தாம்பாளத்தில் தேசிக்கொடி வைக்கப்பட்டு, சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் தேசியக்கொடியை கோயில் கிழக்கு கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து 142 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காலை 7.45 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
