×

மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 70 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 47 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. வரத்தை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் நேற்று முன்தினம் 94.15 அடியாக இருந்தது நேற்று காலை 93.63 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 56.90 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam ,Mettur ,
× RELATED அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர்...