×

விபி-கிராம்ஜி திட்டம் தொடர்பான ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. மாநிலக்குழு வலியுறுத்தல்

சென்னை: விபி-கிராம்ஜி திட்டம் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை :
தமிழ்நாடு அரசின் கொள்கையினையும், சட்டப் பேரவை தீர்மானத்தின் உணர்வையும் கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் தனது கடந்த 12ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பொருளை மாற்றாமல் விடப்பட்டிருப்பது ஏற்க தக்கதல்ல. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கிராம சபாக்களில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம சபா உறுப்பினர்கள் முன்மொழிவதை ஈரோடு மாவட்டத்தில் அலுவலர்கள் ஏற்க மறுத்து, விபி-கிராம்ஜி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் பெற முயற்சித்து வருவதை அரசின் கவனத்துக்கு தெரிவித்து, கிராம சபா உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மட்டுமே அரசு ஏற்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர், அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Tags : Panchayat ,Indian Communist ,State Committee ,Chennai ,Indian Communist State Committee ,Tamil Nadu government ,Assembly ,
× RELATED தேசத்தின் வரலாறு தெரியாமல் பிரதமர்...