- செங்கோட்டையன்
- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- சத்தியமங்கலம்
- சத்யமங்கலம், ஈரோடு மாவட்டம்
- மாவீரர் அஞ்சலி நாள்
- அதிமுக புறநகர் மேற்கு மாவட்டம்
- ஏ.கே.செல்வராஜ்
- தவெகா
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ பேசியதாவது:
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசும்போது, 50 ஆண்டு அரசியல் வரலாற்றில் விஜய் போன்று தலைவரை பார்த்தில்லை என பேசியுள்ளார். அப்படியென்றால் எம்ஜிஆரை காட்டிலும், ஜெயலலிதாவை காட்டிலும் விஜய் பெரிய தலைவரா? நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசலாமா, உன் வயதில் அப்படி பேசுவதா, என்ன பிழைப்பு இது?, இது அவமானமாக இருக்கிறது.
யார் பின்னாடி வேண்டுமானாலும் போங்கள், உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது. அதிமுகவில் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்டு தனியாக இருந்திருந்தால் மதிப்பு மரியாதை உயர்ந்திருக்கும். இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி பேசுவதா?. விளையாட்டு போட்டியில் விசில் அடித்தால், அவுட் என்று அர்த்தம். செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை அவுட் ஆகிவிட்டது. நாவடக்கத்தோடு பேசுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
