- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கருணாஸ்
- சாத்தூர்
- முக்குலத்தோர் புலிப்படை
- வெம்பக்கோட்டை
- சாத்தூர், விருதுநகர் மாவட்டம்
- விஜய்
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், நேற்று அளித்த பேட்டி:
ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர். இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. பாஜவை நம்பி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சை, நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளனர்.
10 நாட்களுக்கு முன் இபிஎஸ் பற்றியும், பாஜ பற்றியும் டிடிவி.தினகரன் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள். இபிஎஸ் மீது குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறிவந்த டிடிவி, இன்றைக்கு, சூழ்நிலை கைதியாகி பங்காளிச்சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கை. பாஜவின் அரசியல் தீர்மானமே மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பாஜவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜ தமிழகத்தில் காலூன்றாது. இவ்வாறு கருணாஸ் கூறினார்.
